ரெஸ்யூம் (Resume) சரிபார்ப்பு வழிகாட்டி
பணி விண்ணப்பக் குறிப்பு தயாரிப்பதற்கான சரிபார்ப்புப் பட்டியல். இந்தப் பக்கம் தானியங்கி முறையில் ரெஸ்யூம் உருவாக்காது; உங்கள் உண்மையான தகுதிகளைச் சரியாக வெளிப்படுத்த உதவும் வழிகாட்டுதல் மட்டுமே.
- 01
ஒன்று அல்லது இரண்டு பக்கங்களுக்குள் சுருக்கமாக அமையுங்கள்; தேவையற்ற விவரங்களைத் தவிர்க்கவும்.
- 02
நிறுவனம் மற்றும் நேர்காணல் குழு எதிர்பார்க்கும் மொழியில் (பெரும்பாலும் ஆங்கிலம்) தெளிவாக எழுதவும்.
- 03
நீங்கள் ஆற்றிய பணிகள், கற்றறிந்த திறன்கள் மற்றும் அடைந்த சாதனைகளை மட்டும் குறிப்பிடவும்.
- 04
நிறுவனம் வெளிப்படையாகக் கேட்காதவரை புகைப்படம் இணைக்கத் தேவையில்லை.
- 05
இல்லாத அனுபவம், தவறான பதவி அல்லது போலி வேலைத் தேதிகளை ஒருபோதும் குறிப்பிட வேண்டாம்.
- 06
கல்வித் தகுதி, வசிக்கும் ஊர் மற்றும் கல்வி பயின்ற ஆண்டுகளைத் துல்லியமாகக் குறிப்பிடவும்.
- 07
மின்னஞ்சல் முகவரியும் தொடர்பு எண்ணும் போதுமானது; ஆதார் எண், வங்கி விவரங்களை இணைக்க வேண்டாம்.
- 08
ஆவணத்தை உங்கள் பெயரிட்டு (எ.கா: Ramesh_Resume.pdf) PDF வடிவத்தில் சேமித்துப் பகிரவும்.
நேரடி நேர்காணல் vs மின்னஞ்சல் ரெஸ்யூம்
நேரடி நேர்காணலுக்கு அச்சிட்ட ஒரு பக்கம் போதும்; நிறுவனம் கேட்டால் மட்டுமே புகைப்படம். மின்னஞ்சல் விண்ணப்பத்திற்கு PDF, உங்கள் பெயர் கோப்புப் பெயரில், பொருள் வரியில் பதவி. இத்தளத்தில் ரெஸ்யூம் ஏற்ற வேண்டாம்.
புகைப்படம்
முதலாளியர் வெளிப்படையாகக் கேட்காவிட்டால் புகைப்படம் வேண்டாம். வேலைPechu கணக்கில் புகைப்படம் இல்லை.